ஆன்மிக பூமியில் தி.மு.க., வெல்வது எப்படி?: சந்தேகம் கிளப்புகிறார் தர்மேந்திர பிரதான்

UPDATED : பிப் 11, 2026 05:45 AM


11-பிப்-2026 12:10

தமிழகத்துல, பாஜக தனது வடஇந்திய வாசனையை குறைத்து தென்னிந்திய வாசனையை கூட்டனும். இந்து மதத்தில் வேதம் சார்ந்த, வேதம் சாராத மற்றும் கிராமிய மதங்கள் என பல பிரிவுகளும் அதன் பல உட்பிரிவுகளும் இருக்கும் போது, ஒரு பிரிவான சனாதனமே இந்து மதம் என்பதை ஏற்க ஏன் அழுத்தம் கொடுக்கனும்? அது இந்து ஒற்றுமைக்கு தடையாகவே அமையும். ஒருவர் சனாதனியாக இருக்க பல அம்சங்கள் இருக்கனும். அவைகள் 15% இந்துக்களுக்கே பொருந்தும். அவைகளில் வேதங்களை ஏற்பது, அனைத்தும் ஒன்றே என்பது, ஆன்மா, கர்மா, அஹிம்சா, மறுபிறவி, முக்தி போன்றவைகளில் நம்புவது அடக்கம். சைவ சித்தாந்தம் உட்பட பல சமயங்கள் வேதத்தை ஏற்பதில்லை. புலால் உண்பவர் அஹிம்சையை ஏற்கவில்லை. அனைத்தும் ஒரே பிரம்மம் என்பதை வைணவம் ஏற்கவில்லை. தனியாக ஒரு ஆன்மா (soul) இருப்பதை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான புத்தர் ஏற்கவில்லை. கர்மா, மறுபிறவி, முக்தி போன்றவற்றில் பல வேறுபட்ட கண்ணோட்டம் உண்டு. இந்துக்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பொதுவான வாழ்வியல் முறைகளாலேயே ஒன்றுபடுகிறார்கள் என்பதை ஏற்கனும். வேதங்கள் நிலையானது, ஆனால் ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டியது முன்பு செய்தது போல அவைகள மாற்றி எழுத வேண்டிய காலம் இது. இதையும் புரிந்து பேசினால் தமிழகமும் பாஜக வசப்படும்.

Welcome