பழனிசாமிக்கு பாடம் புகட்டினாரா பிரேமலதா?: தே.மு.தி.க., வருகையால் தி.மு.க., உற்சாகம்
UPDATED : பிப் 20, 2026 10:05 PM
20-பிப்-2026 07:38
தேசிய முற்போக்கு கூட்டணியில் எந்த பெரிய கட்சிகளையும் சேர்க்காமல் பழனிச்சாமியோடு நயினார் தனியாக கூட்டணி அமைத்து தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பெரிய வீழ்ச்சியை தந்து வருகிறார். வெறும் வீர வசனங்களால் கோட்டையை பிடிக்க முடியாது என்பதை 2021 தேர்தலில் அடி வாங்கிய பிறகும் பழனிச்சாமி இன்னமும் இரண்டு கட்சி தலைவர்களின் காதில் பூ சுற்றும் வேலையை தைரியமாக செய்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் மிக வேகமாக - புத்திசாலிதனமாக- அரசு பணத்தில் தாராளமாக சலுகைகளையும் உரிமை தொகை என்ற பெயரில் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தையும் கண்ணை மூடி கொண்டு வழங்கி வருகிறார். இன்னமும் அவரது கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவரவில்லை. அதில் என்னென்ன உத்தரவாதம் தர போகிறார் என தெரியவில்லை. மற்றொரு புறம் விஜய் மக்களோடு முற்றிலும் தொடர்பு கொள்ளாத முடியாத வகையில் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பலவித கட்டுபாடுகளை அவருக்கு அளித்து வருகிறார். இவை அணைத்தையும் பார்க்கும் போது தி.மு.க. கூட்டணி அவர்களே ஏதிராபார்க்காத வகையில் பெரிய வெற்றியோடு மீண்டும் ஆட்சிக்கு வர பழனிச்சாமி -நயினார் இருவரும் வழியை திறந்து விட்டார்களோ என தோன்றுகிறது.
