'பணம் நமக்கு; பிரச்னை மக்களுக்கு' என்பதே திமுகவின் எண்ணம்: பிரதமர் மோடி காட்டம்
UPDATED : மார் 02, 2026 12:33 AM
01-மார்-2026 21:21
ராமேஸ்வரத்திற்கான பழைய பாம்பன் பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்றது. இத்தனை காலத்திற்கு பிறகு அது மாற்றப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் 2004 முதல் 2014 வரை, திமுக மற்றும் காங்கிரஸ் என்ன செய்தன? ரயில்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுடைய அரசின் கோப்புகள் அதைவிட மெதுவாக நகர்ந்தன. நவீன பாம்பன் பாலத்துக்கு ஒப்புதல் அளித்தது பாஜக அரசுதான். கடந்த ஆண்டு அதை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் பணியில் வேகம் காட்டினோம் இப்போது ரயில்களும் வேகமாக இயங்குகின்றன. 2009 முதல் 2014 வரை தமிழகத்திற்கான ஆண்டுதோறும் ரயில்வே ஒதுக்கீடு சுமார் ரூ. 880 கோடியாக இருந்தது. அப்போது மத்தியிலே காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தன. ஆனால், இப்போது (பாஜக ஆட்சியில்) 2026-27 ஆம் ஆண்டில் அது ரூ. 7,600 கோடிக்கும் அதிகமாக உள்ளது. சுமார் எட்டு மடங்கு உயர்வு. மாநிலத்திற்காக ஏதாவது செய்ய முடிந்திருந்தபோது, காங்கிரஸ் மற்றும் திமுக எதையும் செய்யவில்லை. ஆனால் இன்று அவர்கள் நம்மைவாய் கிழிய குறை கூறுகின்றனர்.
