மக்கள் நலக்கூட்டணி 2.0 உருவாகிறதா; அறிவாலயத்தில் திக்...திக்...

UPDATED : மார் 15, 2026 06:10 AM


14-மார்-2026 20:11

இத்தனை நாட்களாக காங்கிரஸ் தவெக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த திமுக இப்போது காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து இந்த கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டு விட்டதால் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட திமுகவிற்கு இப்போது அடிவயிற்றில் புதிதாக ஒரு பயம் தொற்றிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்து விட்டதால் நடிகர் ஜோசப் விஜய்க்கு வேறு போக்கிடம் கிடையாது அதனால் அவர் தனியாக நின்றுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறிய விஜய் எங்கே ஒருவேளை NDA வில் இருக்கும் எடப்பாடியோடு கூட்டணி வைத்து விடுவாரோ என பயந்த ஸ்டாலின் தன் மருமகன் சபரீசனின் PEN நிறுவனம் மூலம் விசிகவும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டாமல் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளும், விசிக திருமாவளவனும் ஒருபோதும் திமுக கூட்டணியையும் அவர்கள் கொடுக்கும் பணத்தையும் விட்டு விட்டு விஜய் கூட்டணிக்கு போகவே மாட்டார்கள். இதெல்லாம் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிடக் கூடாது என்பதுதற்காக திமுக கிளப்பிவிடும் வதந்தி என்று சாமானியனான எனக்கே தெரியும் போது பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் குறிப்பாக நடிகர் விஜய்க்கும் தெரியாதா என்ன?

Welcome