புதுச்சேரி முதல்வர் கோபத்துக்கு அடிபணிந்த பா.ஜ.,
UPDATED : மார் 18, 2026 04:16 PM
18-மார்-2026 08:09
ரங்கசாமிக்கு புதுவையில் இருக்கும் ஆதரவு அவருடைய நிர்வாக திறமையால் அல்ல ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்ற ரீதியில் மக்களின் வரிப்பணத்திலும் மத்திய அரசு வழங்கும் நிதியிலும் அவர் வாரி இழைக்கும் இலவசங்களால் என்பது அனைவரும் அறிந்தது. நாராயணசாமி போன்ற ஒரு நல்ல நிர்வாகியின் திறமையும் பயனும் எடுபடாமல் போனதிற்கு காரணம், கிரண் பேடியின் வரம்பு மீறிய செயல்களே. எப்படி முன்பொருமுறை அதிமுகவோடு கூட்டுசேர்ந்து வென்று தேர்தல் முடிந்தவுடன் சுயேட்சை உதவியுடன் ஆட்சி அமைத்தாரோ, அதேபோல் கிரண் பேடி நீக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிஜேபி உடன் கூட்டுசேர்ந்து மத்திய அரசின் ஆதரவை முழுவதும் பயன்படுத்திக் கொண்ட பிறகு இப்போது விஜய் கட்சியோடும் அவருக்கு ஒரு சபலம். இப்படிப்பட்ட தந்திரமான முதல்வருக்கு இப்போது தனி மாநில கோரிக்கை. புதுவை தனி மாநிலம் ஆனால் நிதி பற்றாக்குறை உயரும் ஆனால் இவர் இஷ்டப்படி ஆட்சி செய்ய முடியும். எனவே இத்தகைய நிபந்தனைகளை பிஜேபி ஏற்கக்கூடாது என்பதே நடுநிலை புதுவை மக்களின் எதிர்பார்ப்பு.
