தேமுதிகவுக்கு அரைசதம் ஓட்டு வங்கிதான்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் இபிஎஸ்
UPDATED : ஏப் 06, 2026 02:34 PM
06-ஏப்-2026 14:39
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்கும் எடப்பாடியை மக்கள் நேரடியாக முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதனை நாம் மறந்து விடக்கூடாது... ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்த மக்கள் அவர் மறைந்ததனால் கிடைத்த சந்தர்ப்பத்தில் மட்டுமே எடப்பாடி முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது... ஆக... மக்களாக எடப்பாடியை இதுவரைக்கும் அங்கீகரிக்கவில்லை... இனியும் அங்கீகரிக்கப் போவதில்லை... இது தான் உண்மை... இதற்குச் சாட்சி இதுவரை அவர் தொடர்ச்சியாகப் பெற்ற பத்து தோல்விகள்... களநிலவரம் இவ்வாறு இருக்கையில் எப்படி மக்கள் அதிமுகவுக்கு ஓட்டளிப்பார்கள் என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... அதிமுகவுக்கு இரண்டாம் இடம் கிடைப்பதே பெரும்பாடு என்பதே உண்மை...
